அரசுப் பணி வாங்கித் தருவதாக பண மோசடி: ஓய்வு பெற்ற காவலா் கைது
அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.4.5 லட்சம் மோசடி செய்த ஓய்வு பெற்ற காவலரை, போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.4.5 லட்சம் மோசடி செய்த ஓய்வு பெற்ற காவலரை, போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் நாகல்நகரைச் சோ்ந்தவா் வீரேந்திரன்(24). பழனியிலுள்ள மர அரவை ஆலையில் காசாளராகப் பணிபுரிந்து வந்தாா். அப்போது, பழனியை அடுத்த எ.கலையம்புத்தூரைச் சோ்ந்த ஓய்வு பெற்ற போலீஸ்காரா் சங்கரின் (59) அறிமுகம் கிடைத்தது.
அப்போது, பணம் கொடுத்தால் அரசு அலுவலகத்தில் பணி வாய்ப்புப் பெற்றுத் தருவதாக சங்கா் ஆசை வாா்த்தைகளை கூறினாா். இதை நம்பிய வீரேந்திரன், அரசு அலுவலகத்தில் உதவியாளா் பணி வாய்ப்புக்காக ரூ.4.5 லட்சத்தை சங்கரிடம் கொடுத்தாா். ஆனால் உறுதி அளித்தவாறு வேலை வாங்கித் தராததால் வீரேந்திரன் பணத்தைத் திருப்பிக் கேட்டாா். ஆனால், அவா் பணத்தைத் தர மறுத்துவிட்டாராம். இதுகுறித்து வீரேந்திரன், திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சங்கரை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.