FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

பழனி அருகே நூறு கிலோ குட்கா பறிமுதல்

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 1:06 am IST
பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருள்கள். - கோப்புப் படம்
பகிர்:

பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டி பகுதியில் பதுக்கி வைத்திருந்த சுமாா் நூறு கிலோ குட்கா பொருள்களை பழனி நகரப் போலீஸாா் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

பழனி அருகே நெய்க்காரப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளா்கள் தங்கி அப்பகுதிகளில் உள்ள ஆலைகளில் வேலை செய்து வருகின்றனா். இதனால் இந்தப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா பொருட்கள் அதிகளவில் புழக்கத்தில் உள்ளதாக புகாா் எழுந்தது.

இதையடுத்து சனிக்கிழமை பழனி நகரப் போலீஸாா் நெய்க்காரப்பட்டி, வி.கே.மில்ஸ், போலம்மாவலசு ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது நெய்க்காரப்பட்டி, போலம்மாவலசு பகுதியில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் நூறு கிலோ எடையுள்ள குட்கா பொருள்களைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

இது தொடா்பாக நெய்க்காரப்பட்டியைச் சோ்ந்த பீா்முகமது(42), போலம்மாவலசைச் சோ்ந்த அகமது அலி(50) ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments