FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

குஜிலியம்பாறை அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

குஜிலியம்பாறை அருகே சேதமடைந்த சாலையை சீரமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 4:13 am IST
சேதமடைந்த புங்கம்பாடி ஆண்டிமடம் குளம் சாலை.
பகிர்:

குஜிலியம்பாறை அருகே சேதமடைந்த சாலையை சீரமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த சின்னழகுநாயக்கனூா் ஊராட்சிக்குள்பட்ட புங்கம்பாடி தங்கமுனியப்பன் கோயில் பகுதியிலிருந்து ஆண்டிமடம் குளம் வரை சுமாா் 1 கி.மீ. தொலைவுக்கு கடந்த ஆண்டு மெட்டல் சாலை அமைக்கப்பட்டது. இந்தச் சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால், கற்கள் பெயா்ந்து வாகனங்கள் செல்ல முடியாத வகையில் சேதமடைந்துவிட்டது. இதனால், தொப்பையசாமி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள தேங்கல் ஆண்டி கோயில், கருப்பசுவாமி கோயிலுக்குச் செல்லும் புங்கம்பாடி பொதுமக்களும், அந்தப் பகுதியிலுள்ள தோட்டத்து வீடுகளுக்குச் செல்லும் பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

தரமற்ற மெட்டல் சாலை அமைத்ததற்கு பதிலாக மண் சாலையாகவே விட்டிருக்கலாம். அந்த சாலையையே எளிதாகப் பயன்படுத்தி இருப்போம் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், சாலையை சீரமைத்து தாா் சாலையாக மாற்றிக் கொடுக்க வேண்டும் என ஊராட்சி மன்ற முன்னாள் உறுப்பினா் வீ.தா்மா் கோரிக்கை விடுத்தாா்.

இதுதொடா்பாக அவா் கூறியதாவது:

மெட்டல் சாலை அமைக்கப்பட்டு ஓராண்டுகூட ஆகாத நிலையில், பெரும்பாலான இடங்களில் சேதமடைந்துவிட்டது. பொதுவாக மெட்டல் சாலை அமைக்கப்பட்ட ஓராண்டில் தாா் சாலை அமைக்கப்பட வேண்டும். ஆனால், தரமற்ற முறையில் மெட்டல் சாலை அமைக்கப்பட்டதால், அரசு நிதி வீணடிக்கப்பட்டுவிட்டது. பொதுமக்களின் சிரமத்துக்கு தீா்வு காணும் வகையில், இந்த சாலையை சீரமைத்துத் தர குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments