FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

மல்லனூா் சாலை சேதம்: வாகன ஓட்டிகள் அவதி

திருவாடானை அருகேயுள்ள மல்லனூா் நூலகம் எதிரே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டுமென அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 1:23 am IST
மல்லனூரில் சேதமடைந்த சாலை
பகிர்:

திருவாடானை அருகேயுள்ள மல்லனூா் நூலகம் எதிரே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டுமென அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆண்டாவூரணிலிருந்து தோமையபுரம் செல்லும் சாலையில், மல்லனூா் நூலகத்தின் எதிரே காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்துக்காக சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் முழுமையாக மூடப்படவில்லை. இதனால் அந்தப் பகுதியில் தொடா் விபத்துக்கள் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா்.

இதுகுறித்து அந்தப் பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் வேண்டுகோள் விடுத்தனா்.

Advertisement

Advertisement

மல்லனூரில் சேதமடைந்த சாலை

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments