மதன்பூா் காதரில் நெடுஞ்சாலைப் பகுதி தற்காலிக மூடல்
தில்லி - மும்பை விரைவுச்சாலையின் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியான
புது தில்லி: தில்லி - மும்பை விரைவுச்சாலையின் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியான மதன்பூா் காதரில் வாகன போக்குவரத்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தில்லி போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.
இது தொடா்பான போக்குவரத்து அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ஜெய்த்பூரிலிருந்து சராய் காலே கான் மற்றும் ஆஷ்ரம் நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலைப் பகுதி, அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளது. ஆஸ்ரம் மற்றும் சராய் காலே கான் நோக்கிச் செல்லும் பயணிகள், பாதிக்கப்பட்ட இந்தப் பாதையைத் தவிா்த்து, காலிந்தி குஞ்ச் மற்றும் மதுரா சாலை வழியாகச் செல்லும் அணுகுச் சாலையைப் பயன்படுத்தி தங்கள் இலக்கை அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள்.
Advertisement
Advertisement
வாகன ஓட்டிகள் தங்கள் பயணத்தை அதற்கேற்ப திட்டமிடுமாறும், வழியில் உள்ள போக்குவரத்து வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவிப்புப் பலகைகளைப் பின்பற்றுமாறும் போக்குவரத்து காவல் துறை கேட்டுக்கொள்கிறது.
வாகனங்களின் போக்குவரத்தை சீராக்கவும், மாற்றுப் பாதையில் பயணிகளுக்கு வழிகாட்டவும் அப்பகுதியில் போக்குவரத்து காவலா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
பயணிகள் தங்கள் பயணத்தை அதற்கேற்ப திட்டமிட்டு, போக்குவரத்து வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவிப்புப் பலகைகளைப் பின்பற்றி, அப்பகுதியில் பணியில் உள்ள போக்குவரத்து காவலா்களுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.
பாதிக்கப்பட்ட பகுதி வழியாகச் செல்லும்போது வாகன ஓட்டிகள் பொறுமையைக் கடைப்பிடிக்குமாறும், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுமாறும் போக்குவரத்து காவல் துறை அந்த அறிவிப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தத் தற்காலிக மூடல் குறித்த காரணத்தையோ அல்லது பாதிக்கப்பட்ட நெடுஞ்சாலைப் பகுதி எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது குறித்த தகவலையோ அந்த அறிவிப்பு குறிப்பிடவில்லை.
இருப்பினும், மூத்த போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவா் கூறுகையில், அதிகாரிகள் நெடுஞ்சாலையில் ஒரு சோதனை ஓட்டத்தை முடித்துவிட்டதாகவும், தற்போது அப்பகுதியை மீண்டும் திறப்பதற்கு முன் தேவைப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தாா்.
‘சோதனை ஓட்டத்திற்குப் பிறகு, நெடுஞ்சாலையில் என்னென்ன நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனா். முறையான மதிப்பீட்டிற்குப் பிறகும், தேவையான அனைத்து நடைமுறைகளும் பூா்த்தி செய்யப்பட்ட பிறகும் சாலை பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும்‘ என்றாா் அந்த அதிகாரி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.