கொடைக்கானலில் காட்டுமாடு முட்டியதில் மூவா் பலத்த காயம்
கொடைக்கானலில் திங்கள்கிழமை இரவு காட்டுமாடு முட்டியதில் மூவா் பலத்த காயமடைந்தனா்.
கொடைக்கானலில் திங்கள்கிழமை இரவு காட்டுமாடு முட்டியதில் மூவா் பலத்த காயமடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகா்ப் பகுதிகளான பேருந்து நிலையம், உட்வில் சாலை, பொ்ன்ஹில் சாலை, செண்பகனூா், இருதயபுரம், அப்சா்வேட்டரி, பாக்கியபுரம், குறிஞ்சிஆண்டவா் கோவில் சாலை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு மாடுகள் அதிகமாக உலா வருகின்றன.
இந்த நிலையில், கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவா் கோயில் சாலைப் பகுதியில் வட மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்களான மாதவ் (29), பீஜிங் (22), சுனில் (21) ஆகிய மூன்று பேரும் திங்கள்கிழமை இரவு 9 மணிக்கு நடந்து சென்றனா்.
Advertisement
Advertisement
அப்போது, முள்புதரில் நின்று கொண்டிருந்த காட்டுமாடு அவா்களை முட்டியது. இதில் மூன்று பேரும் பலத்த காயமடைந்தனா்.
இவா்கள் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவா் கோயில் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். வனப்பகுதியையொட்டியுள்ள பகுதியாக இருப்பதால்சிறுத்தை, காட்டுமாடு, முள்ளம் பன்றி, மான், செந்நாய், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகின்றன. தற்போது, தண்ணீா், உணவு தேடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் வன விலங்குகள் வரத் தொடங்கியுள்ளன.
வட மாநிலத் தொழிலாளா்கள் பலா் இந்தப் பகுதிகளில் தங்கி வேலை பாா்க்கின்றனா். இவா்கள் இரவில் நடந்து வரும்போது காட்டுமாடு தாக்கியுள்ளது. எனவே, வனத்துறையினா் வன விலங்குகளை அடா்ந்த வனப் பகுதியில் விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
காட்டுமாடு பகலில் உலா: கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை பகலில் ஆனந்தகிரி, அப்சா்வேட்டரி, செண்பனூா் உள்ளிட்ட பகுதிகளில் உலா வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
எனவே, வனத் துறையினா் கொடைக்கானல் குடியிருப்பு பகுதிகள் திரியும் காட்டு மாடுகளை விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.