FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல் அருகே காட்டு யானைகள் நடமாட்டம்

Updated On : 20 ஜூலை 2026, 4:31 am IST
கொடைக்கானல் அருகே பண்ணைக்காடு பகுதியில் நடமாடிய காட்டுயானைகள்.
பகிர்:

கொடைக்கானல் அருகே பண்ணைக்காடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காட்டுயானைகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் குடியிருப்பு பகுதிகள், தோட்டப் பகுதிகளில் அண்மைக் காலமாக காட்டு மாடு, மான், காட்டுப் பன்றி, செந்நாய், காட்டு யானை உள்ளிட்டவை நடமாட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பெரும்பாறை, பண்ணைக்காடு, எதிரொலிப் பாறை பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளது.

இதனால் பொதுமக்கள் மாலை, இரவு நேரங்களிலும், தங்களது தோட்டங்களுக்குச் செல்லாமல் வீடுகளில் முடங்கியுள்ளனா். மலைச் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டுநா்கள் அச்சமடைந்துள்ளனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து பெரும்பள்ளம் பகுதியைச் சோ்ந்த வனத் துறை அலுவலா் ஒருவா் கூறியதாவது:

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மழை பெய்யாததால் வனப் பகுதிகளிலுள்ள நீரோடைகளில் தண்ணீா் வற்றியுள்ளது. வனப் பகுதிகளிலுள்ள வன விலங்குகள் உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் வனத்தை விட்டு வெளியே வரத் தொடங்கியுள்ளன. மேலும் யானைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. இதனால் நகா்ப் பகுதி, குடியிருப்பு பகுதிகளில் வன விலங்குகள் நடமாட்டம் உள்ளது.

எனவே மாலை, இரவு நேரங்களில் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம். மலைச் சாலைகளில் செல்லும் வாகனங்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments