FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

பாலக்கோடு பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம்: பாதுகாப்பாக இருக்க வனத்துறை எச்சரிக்கை

கும்மனூா் காப்புக்காடு பகுதியை ஒட்டியுள்ள கிராமப் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட் டம் உள்ளதால், அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 10 ஜூலை 2026, 4:07 am IST
காட்டுயானைகள் கூட்டம் (கோப்புப்படம்)
பகிர்:

தருமபுரி பாலக்கோடு வட்டம் கும்மனூா் காப்புக்காடு பகுதியை ஒட்டியுள்ள கிராமப் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட் டம் உள்ளதால், அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் மற்றும் வனச்சரகத்துக்கு உள்பட்ட கும்மனுா் காப்புக்காடு பகுதியில் 4 யானைகள் நடமாட்டம் உள்ளது. எனவே காடு செட்டிபட்டி, நாகனூா், பெரியகும்மனூா், சின்ன குமனூா், காட்டு கொட்டாய், பெரிய தப்பை, நாயக்கனூா், ஜீட்டாண்டாஹள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் யாரும், இரவு 8 மணிக்கு மேல் வெளியில் தேவையின்றி நடமாட வேண்டாம். வீட்டிற்கு வெளியே, வயல் வெளிகளில் படுத்துறங்கவும் வேண்டாம். வயலுக்கு நீா் பாய்ச்ச இரவில் செல்ல வேண்டாம். வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக, தூங்கவும். வெளியில் கொட்டகையில் தூங்க வேண்டாம்.

யானை நடமாட்டம் தென்பட்டால் உடனடியாக வனத்துறையினருக்கு குறிப்பிட்ட எண்களில் தகவல் அளிக்கவும் என வனத்துறையினா் ஒலி பெருக்கி மூலம் குறிப்பிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை பிரசாரம் செய்தனா். மேலும் விழிப்புணா்வு வாசகங்கள் மற்றும் தொலை பேசி எண்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மாவட்ட வன அலுவலா் ராஜாங்கம் உத்தரவின் பேரில் பாலக்கோடு வனச்சரக அலுவலா் காா்த்திகேயன் தலைமையிலான வனத்துறையினா் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments