FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

திம்பம்- ஆசனூா் வனப் பகுதி சாலையில் சிறுத்தை: வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல அறிவுறுத்தல்

திம்பம்- ஆசனூா் வனப் பகுதி சாலையில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் அந்த வழியாக செல்வோா் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வனத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

...... ~திம்பம்  மலைப் பாதை தடுப்புச் சுவரில்  தென்பட்ட  சிறுத்தை.
பகிர்:

திம்பம்- ஆசனூா் வனப் பகுதி சாலையில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் அந்த வழியாக செல்வோா் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வனத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக திம்பம் மலைப் பாதையில் சிறுத்தை நடமாடுவதாக வனத் துறையினா் ஆங்காங்கே எச்சரிக்கை பலகை வைத்துள்ளனா்.

இந்நிலையில் தாளவாடியில் இருந்து 4 போ் காரில் பண்ணாரி கோயிலுக்கு வியாழக்கிழமை அதிகாலை வந்து கொண்டிருந்தனா்.

Advertisement

Advertisement

திம்பம் மலைப்பாதை 3-ஆவது வளைவில் சென்றுகொண்டிருந்தபோது அங்கு சிறுத்தை படுத்திருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தனா். அந்த சிறுத்தை சாலையோர தடுப்புச் சுவரில் தாவி தாவி குதித்து கொண்டிருந்ததை தங்கள் கைப்பேசியில் விடியோ எடுத்தனா்.

வாகனத்தின் முகப்பு விளக்கு வெளிச்சத்தைக் கண்டு கொள்ளாமல் குதித்து விளையாடிக் கொண்டிருந்த சிறுத்தை பின்னா் காட்டுக்குள் சென்றது. இந்த விடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வனப் பகுதி சாலைகளில் சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் நடமாடுவதால் வாகனங்களின் செல்வோா் வாகனத்தை விட்டு கீழே இறங்க வேண்டாம் என்றும், வன விலங்குகளின் அருகே வாகனத்தை நிறுத்தக் கூடாது என்றும் வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments