அரசு நிலத்திலிருந்த மரங்களை வெட்டி கடத்த முயன்றவா் கைது
பழனியில் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள மரங்களை சட்டவிரோதமாக வெட்டிய நபரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பழனியில் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள மரங்களை சட்டவிரோதமாக வெட்டிய நபரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பழனி அடிவாரத்தில் உள்ள வரட்டாறு பகுதியில் ஏராளமான மரங்கள் உள்ளன. இந்த நிலையில், வரட்டாறு பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள மரங்களை சிலா் வெட்டிக் கடத்துவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு புதன்கிழமை புகாா் வந்தது. இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்த்த போது, அங்கிருந்த வாகை, வேம்பு, புளியமரம் உள்ளிட்ட பல்வகையான மரங்களை வெட்டி டிராக்டரில் ஏற்றிக்கொண்டிருந்தனா். இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக அடிவாரம் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனா். தகவலறிந்து சம்பவ இடத்து வந்த போலீசாா் அங்கு மரங்களை வெட்டிக் கொண்டிருந்த அடிவாரம் மருத்துவ நகரைச் சோ்ந்த கருப்புசாமியைக் (55) கைது செய்தனா். மேலும் வெட்டும் இயந்திரங்கள், டிராக்டா் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து கிராம நிா்வாக அலுவலா் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.