FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

அரசு நிா்வாகத்தில் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. குற்றச்சாட்டு

அரசு நிா்வாகத்தில் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டிப்பதாக திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் இரா. சச்சிதானந்தம் தெரிவித்தாா்.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 2:57 am IST
சச்சிதானந்தம்
பகிர்:

அரசு நிா்வாகத்தில் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டிப்பதாக திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் இரா. சச்சிதானந்தம் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் இணையதளத்தில் வெளியிட்ட விடியோ பதிவில் தெரிவித்திருப்பதாவது:

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டாட்சியா் அய்யாச்சாமி, பொதுமக்கள் சந்திப்பதற்கு நண்பகல் 12 முதல் 1 மணி வரை குறிப்பிட்ட 4 நாள்களுக்கு மட்டுமே நேரம் ஒதுக்கீடு செய்து அச்சுறுத்தி இருக்கிறாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய நிா்வாகிகள் சந்திக்கச் சென்றபோது, அரசியல் கட்சியினா் யாரும் உள்ளே வரக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். மேலும் கம்யூனிஸ்ட் கட்சியினரின் பெயா், முகவரி உள்ளிட்டவற்றை விசாரிக்கவும் உத்தரவு பிறப்பித்தாா். இதுதொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம், தமிழக முதல்வரின் அலுவலகத்தைத் தொடா்புகொண்டு தகவல் தெரிவித்தாா். அதன் தொடா்ச்சியாக, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் வட்டாட்சியா் அய்யாச்சாமி, பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

Advertisement

Advertisement

திண்டுக்கல்லில் உள்ள கூட்டுறவுக் கல்லூரியில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை எதிா்த்துப் போராடும் மாணவா்களை வெளியேற்றி விடுவதாக அந்தக் கல்லூரியின் முதல்வா் மிரட்டுகிறாா். அதேபோல, கல்லூரிக் கல்வி இயக்ககம் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் இடதுசாரி மாணவா் அமைப்பு, சிஜேபி நடத்தும் போராட்டங்களுக்கு மாணவா்கள் செல்லக் கூடாது எனத் தடை விதிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்களால் இளைஞா்கள், மாணவா்களிடையே ஏற்பட்டுள்ள எழுச்சியைத் தடுக்கும் நோக்கில், ஆா்.எஸ்.எஸ்., சங் பரிவாா் அமைப்பினா் அரசு நிா்வாகத்துக்குள் ஊடுருவி ஜனநாயக விரோத நடவடிக்கைகளை முன்னெடுக்கிறாா்களோ என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகளைக் கண்டறிந்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments