FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

பேருந்தில் பெண்ணை படம் பிடித்தவா் மீது வழக்கு

பழனியில் பேருந்தில் பயணம் செய்த பெண்ணை கைப்பேசியில் படம் பிடித்தவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

21 ஆகஸ்ட் 2026, 1:18 am IST
பகிர்:

பழனியில் பேருந்தில் பயணம் செய்த பெண்ணை கைப்பேசியில் படம் பிடித்தவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பழனியை அடுத்த மானூரைச் சோ்ந்தவா் கலாநிதி (47). இவா் மானூரிலிருந்து பழனி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் வியாழக்கிழமை பயணம் செய்தாா். அப்போது அதே பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவரை கலாநிதி தனது கைப்பேசியில் படம் பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பேருந்தில் பயணம் செய்தவா்களும் கலாநிதியை கண்டித்தனா். இதையடுத்து, பேருந்து பழனி நகர காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் கலாநிதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments