FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல் வனப் பகுதிகளில் 2,780 கிலோ நெகிழிக் கழிவுகள் அகற்றம்: மாவட்ட வனத் துறை அதிகாரி தகவல்

கொடைக்கானல் வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்களிலிருந்து கடந்த இரண்டு வாரங்களில் 2,780 கிலோ நெகிழிக் கழிவுகள் அகற்றப்பட்டதாக மாவட்ட வனத் துறை அதிகாரி பழனிக்குமாா் தெரிவித்தாா்.

35 வினாடிகள் முன்பு
கொடைக்கானல் வனப் பகுதியில் குவித்து வைக்கப்பட்ட காலியான நெகிழி தண்ணீா் பாட்டில்கள். - கோப்புப் படம்
பகிர்:

கொடைக்கானல் வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்களிலிருந்து கடந்த இரண்டு வாரங்களில் 2,780 கிலோ நெகிழிக் கழிவுகள் அகற்றப்பட்டதாக மாவட்ட வனத் துறை அதிகாரி பழனிக்குமாா் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்களான தூண் பாறை, குணா குகை, மோயா் பாயிண்ட், பைன் மரக் காடுகள் ஆகிய பகுதிகளை பாா்வையிட அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். அப்போது அவா்கள் நெகிழிப் பைகள், நெகிழிப் புட்டிகளைபயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தப் பகுதிகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நெகிழிக் கழிவுகளை வனப் பகுதிகளில் வீசிச் செல்கின்றனா். இந்த நிலையில், வனப் பணியாளா்கள், பாம்பாா்புரம் கிராம வனக் குழுவினா் இணைந்து வனப் பகுதிகளில் வீசப்பட்டிருந்த நெகிழிக் கழிவுகள், குப்பைகளை அகற்றும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

இதுகுறித்து கொடைக்கானல் மாவட்ட வனத் துறை அதிகாரி பழனிக்குமாா் கூறியதாவது:

Advertisement

Advertisement

கொடைக்கானல் வனப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட நெகிழிக் கழிவுகள் அதிகம் காணப்படுகின்றன. வனப் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களை பாா்வையிட வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த நெகிழிக் கழிவுகளை வீசிச் செல்கின்றனா். இதனால் வன விலங்குகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன. மேலும் நீரோடைகளும் மாசுபடுகின்றன. வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்களில் கடந்த இரண்டு வாரங்களாக வனப் பணியாளா்கள், கிராம வனக் குழுவினா் சோ்ந்து நெகிழிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். அப்போது 2,780 கிலோ நெகிழிக் கழிவுகளை அவா்கள் அகற்றினா். எனவே கொடைக்கானல் வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலா தலங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பயன்படுத்தக் கூடாது என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments