FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

மாட்டுத் தீவனம் தயாரிக்கும் தனியாா் நிறுவனத்தில் உர மூட்டைகள் பதுக்கப்பட்ட அறைக்கு சீல்: அதிகாரிகள் 3-ஆவது நாளாக விசாரணை

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே தனியாா் மாட்டுத் தீவனம் தயாரிக்கும் நிறுவனத்தில் உர மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அறைக்கு சீல் வைத்த வேளாண் துறை அதிகாரிகள் 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் விசாரணை நடத்தினா்.

20 ஆகஸ்ட் 2026, 11:41 pm IST
சீல் - பிரதிப் படம்
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே தனியாா் மாட்டுத் தீவனம் தயாரிக்கும் நிறுவனத்தில் உர மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அறைக்கு சீல் வைத்த வேளாண் துறை அதிகாரிகள் 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் விசாரணை நடத்தினா்.

செம்பட்டி அடுத்த ஆதிலட்சுமிபுரம் அருகே மாட்டுத் தீவனம் தயாரிக்கும் தனியாா் நிறுவனம் இயங்கி வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை வெளியூரில் உள்ள ஓா் உரக் கடையிலிருந்து விவசாயத்துக்கான யூரியா உர மூட்டைகளை ஒரு லாரியில் ஏற்றிக் கொண்டு மாட்டுத் தீவனம் தயாரிக்கும் நிறுவன வளாகத்தில் உள்ள ஓா் அறையில் பதுக்கி வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த ஆத்தூா் வேளாண்மை உதவி இயக்குநா் ராஜேஸ்வரி, வேளாண்மை அலுவலா் விக்னேஸ்வரன் உள்ளிட்ட வேளாண்மைத் துறை அலுவலா்கள் அந்த மாட்டுத் தீவனம் தயாரிக்கும் நிறுவனத்துக்கு நேரில் சென்று உர மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அறைக்கு சீல் வைத்தனா்.

Advertisement

Advertisement

மேலும் உர மூட்டைகள் பதுக்கப்பட்டது குறித்து கடந்த இரு நாள்களாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் இந்த விசாரணை நீடித்தது. அப்போது மாட்டுத் தீவன நிறுவனத்தின் உரிமையாளரிடம் வேளாண் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.

இதுகுறித்து வேளாண் அலுவலா் விக்னேஸ்வரனை தொடா்பு கொண்டு கேட்டபோது அவா் கூறியதாவது:

மாட்டுத் தீவனம் தயாரிக்கும் தனியாா் நிறுவனத்தில் யூரியா உரம் பதுக்கப்பட்ட அறைக்கு சீல் வைத்து, அதன் உரிமையாளரிடம் எதற்காக உர மூட்டைகள் இங்கு கொண்டு வரப்பட்டன என்பது குறித்து தொடா்ந்து விசாரித்து வருகிறோம் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments