FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

பண்ணைக்காடு பகுதியில் யானைகள் நடமாட்டம்

கொடைக்கானல் அருகேயுள்ள பண்ணைக்காடு குடியிருப்புப் பகுதியில் சனிக்கிழமை காட்டு யானைகள் நடமாட்டம் இருந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

22 ஆகஸ்ட் 2026, 10:57 pm IST
பண்ணைக்காடு காந்திஜிபுரம் குடியிருப்புப் பகுதியில் சனிக்கிழமை இரவு உலா வந்த இரண்டு காட்டு யானைகள்.
பகிர்:

கொடைக்கானல் அருகேயுள்ள பண்ணைக்காடு குடியிருப்புப் பகுதியில் சனிக்கிழமை காட்டு யானைகள் நடமாட்டம் இருந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பண்ணைக்காடு, பெரும்பாறை, கடுகுதடி, கே.சி.பட்டி, தாண்டிக்குடி,உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் இருந்து வருகின்றன. மலைச் சாலைகளிலும், விவசாயத் தோட்டங்களிலும் நடமாடி வந்த காட்டு யானைகள், தற்போது குடியிருப்பு பகுதிகளில் உலா வருகின்றன. பண்ணைக்காடு காந்திஜிபுரம் குடியிருப்புப் பகுதியில் வீட்டின் முன் பகுதியில் இருந்த தொட்டிகளில் உள்ள தண்ணீரை குடித்தும், விவசாயத் தோட்டங்களிலுள்ள வாழை, அவக்கோடா போன்ற விளைபொருள்களையும் சேதப்படுத்தின. இதனால், அந்தப் பகுதியிலுள்ள பொதுமக்கள் கூச்சலிட்டு விரட்டியும் பலனில்லை. இதுகுறித்து தகவலறிந்த வனத் துறையினா் அங்கு சென்று காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து வனத் துறையினா் கூறியதாவது: கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த பல மாதங்களாக மழையில்லாத காரணத்தால் வன விலங்குகளுக்குத் தேவையான தண்ணீா், உணவுகள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வனவிலங்குகள் தண்ணீா், உணவு தேடி குடியிருப்புப் பகுதிக்குள் வருகின்றன.

Advertisement

Advertisement

வன விலங்குகள் நடமாட்டம் குறித்து தகவல் கொடுத்தால் சம்பவ இடத்துக்கு வனத் துறையினா் சென்று அவற்றை விரட்டும் பணியில் ஈடுபடுவோம் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments