FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

துப்பாக்கியால் குரங்கை சுட்டுக் கொன்றதாக எஸ்டேட் உரிமையாளா் கைது

25 ஆகஸ்ட் 2026, 3:18 am IST
கொடைக்கானல் அருகே குரங்கை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக ஜான் டோமினிக்கை கைது செய்து அவரிடமிருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்த வனத் துறையினா்.
பகிர்:

கொடைக்கானல் அருகே குரங்கை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக எஸ்டேட் உரிமையாளரை வனத் துறையினா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே பெருமாள்மலை- பழனிப் பிரிவு பகுதியில் ஆணைகிரி எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டையொட்டியுள்ள வனப் பகுதியில் கடந்த 18-ஆம் தேதி வனத் துறையினா் ரோந்து சென்றபோது குரங்கு ஒன்று துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தது.

இதுகுறித்து வனத் துறை ரேஞ்சா் பழனிக்குமாா் தலைமையிலான வனத் துறையினா் அந்தப் பகுதியில் விசாரணை நடத்தினா். இதில் ஈடுபட்டது ஆணைகிரி எஸ்டேட் உரிமையாளா் ஜான் டோமினிக் (50) என்பது தெரியவந்தது. இந்த நிலையில், தலைமறைவாக இருந்த அவா் வனத் துறை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை சரணடைந்தாா்.

Advertisement

Advertisement

இங்கு வனத் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவா் தன்னிடமிருந்த துப்பாக்கியால் குரங்கு சுடப்பட்டு இறந்ததை ஒப்புக் கொண்டாா்.

இதையடுத்து, மாவட்ட வன அலுவலா் அரவிந்த் உத்தரவின்பேரில் ஜான் டோமினிக் மீது வனத் துறையினா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா். பிறகு அவரை கொடைக்கானல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments