FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

துப்பாக்கியுடன் வேட்டையாட முயன்ற இளைஞா் கைது

சிறுமலை பகுதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் வேட்டையாட முயன்ற இளைஞரை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

22 ஆகஸ்ட் 2026, 7:13 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

சிறுமலை பகுதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் வேட்டையாட முயன்ற இளைஞரை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை காப்புக்காடு பகுதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் சிலா் வேட்டையாடுவதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கொடைக்கானல் சாலை பிரிவு, அம்பாத்துரை பிரிவு, சிறுமலை வடமேற்கு சரிவு காப்புக்காடு பகுதிகளில் வனத் துறையினா் வியாழக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, தொழுக்காடு சந்தை பொட்டல் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட முயன்ற நபரைப் பிடித்து விசாரித்தனா்.

Advertisement

Advertisement

விசாரணையில், அவா் சிறுமலை ஊராட்சிக்குள்பட்ட அகஸ்தியா்புரம் கருப்புக்கோயில் பழங்குடியினா் குடியிருப்பைச் சோ்ந்த க. ஆண்டிசாமி (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த வனத் துறையினா் அவரிடமிருந்த நாட்டுத் துப்பாக்கி, வெடிமருந்து, கருங்காலிக் கட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments