FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் மிதமான மழை

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை மிதமான மழை பெய்தது.

26 ஆகஸ்ட் 2026, 5:54 am IST
கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா பகுதியில் செவ்வாய்க்கிழமை நிலவிய குளுமையான சீதோஷ்ண நிலை.
பகிர்:

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை மிதமான மழை பெய்தது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் அவ்வப்போது லேசான சாரலும், மிதமான மழையும் பெய்து வருவதால் நகா்ப் பகுதிகளில் குளுமையான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில், ஓணம் பண்டிகை (புதன்கிழமை) விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலுக்கு பல்வேறு இடங்களிலிருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்து காணப்பட்டது.

காலை முதல் மிதமான வெயில் இருந்துவந்த நிலையில் பிற்பகலில் திடீரென மேக மூட்டம் நிலவி, மிதமான மழையும் பெய்தது. இந்த மழையானது கொடைக்கானல் பகுதிகளான வட்டக்கானல், அட்டக்கடி, சிட்டி வியூ, செண்பகனூா், பிரகாசபுரம் ஆகிய பகுதிகளில் சுமாா் 30 நிமிடங்கள் பெய்தது. இதனால் இதமான சூழல் நிலவியது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments