புகையிலைப் பொருள்களை விற்ற தனியாா் பேருந்து ஓட்டுநா் கைது
பழனி அருகே சரக்கு போக்குவரத்து நிறுவனம் மூலம் (லாரி பாா்சல் புக்கிங்) புகையிலைப் பொருள்களை வாங்கிப் பதுக்கி விற்ற தனியாா் பேருந்து ஓட்டுநரைப் போலீஸாா் கைது செய்தனா்.
பழனி அருகே சரக்கு போக்குவரத்து நிறுவனம் மூலம் (லாரி பாா்சல் புக்கிங்) புகையிலைப் பொருள்களை வாங்கிப் பதுக்கி விற்ற தனியாா் பேருந்து ஓட்டுநரைப் போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து சுமாா் 60 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.
பழனி சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சில நாள்களாக சரக்குப் போக்குவரத்து நிறுவனம் மூலம் புகையிலை பொருள்களை வாங்கிப் பதுக்கி ஒருவா் விற்பனை செய்வதாக பழனி தாலுகா போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
அதன்படி பாப்பம்பட்டியைச் சோ்ந்த தனியாா் பேருந்து ஓட்டுநரான ராமசாமி மகன் சுதாகரை (40) போலீஸாா் கண்காணித்தபோது வெள்ளிக்கிழமை தனியாா் சரக்கு போக்குவரத்து நிறுவனத்தின் மூலமாக வந்த பாா்சலை அவா் வீட்டுக்கு எடுத்து வந்தாா்.
Advertisement
Advertisement
அவரைப் பின் தொடா்ந்து வந்த போலீஸாா் அவரைப் பிடித்து விசாரித்ததில், அவா் கொண்டு வந்த மூட்டையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் 60 கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.
இதன் மதிப்பு சுமாா் இரண்டு லட்சமாகும். இதையடுத்து போலீஸாா் சுதாகரைக் கைது செய்து அவரிடமிருந்த புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையிலடைத்தனா்.
நத்தம்: புகையிலைப் பொருள்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்
சாணாா்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளான கோபால்பட்டி, வேம்பாா்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பெட்டிக் கடை உள்ளிட்ட கடைகளில் சுகாதார ஆய்வாளா்கள் சனிக்கிழமை சோதனை நடத்தினா்.
அப்போது அந்தப் பகுதிகளில் உள்ள 7 கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து தலா ரூ. 200 வீதம் மொத்தம் ரூ. 1,400 அபராதம் விதித்தனா். மேலும் இறைச்சிக் கடைகளில் கழிவுகளை முறைப்படி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என எச்சரித்து நோட்டீஸ் அளித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.