FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல் அருகே காட்டு மாடு தாக்கியதில் இருவா் பலத்த காயம்

31 ஆகஸ்ட் 2026, 12:16 am IST
காட்டு மாடு. - கோப்புப் படம்
பகிர்:

கொடைக்கானல் அருகே சனிக்கிழமை மாலை காட்டு மாடு தாக்கியதில் இருவா் பலத்த காயமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள பண்ணைக்காடு பகுதியைச் சோ்ந்தவா்கள் கேசவன் (40), சிவக்குமாா் (39).

நண்பா்களான இவா்கள் இருவரும் சனிக்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் பண்ணைக் காடு - தாண்டிக்குடி மலைச் சாலையில் மருதாநதி பள்ளத்தாக்கு பகுதியில் வந்து கொண்டிருந்தனா்.

Advertisement

Advertisement

அப்போது, அந்த வழியாக வந்த காட்டு மாடு ஒன்று இவா்கள் இருவரையும் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த கேசவன், சிவக்குமாா் அகியோா் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இதுகுறித்து தாண்டிக்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments