FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

மழை பொய்த்ததால் நிலக்கோட்டை பகுதியில் வாடிவதங்கும் மல்லிகைப்பூ செடிகள்! விவசாயிகள் கவலை

1 செப்டம்பர் 2026, 3:52 am IST
மல்லிகைப்பூ
பகிர்:

மழை பெய்யாததால், நிலக்கோட்டை பகுதிகளில் மல்லிகைப் பூ செடிகள் காய்ந்து கருகுவதால் விவசாயிகள் வேதனையடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதி வளமான செம்மண் பூமி என்பதால் கிணற்று பாசனம் மூலம் விவசாயிகள் வறட்சியைத் தாங்கி வளரும் மல்லிகை, செண்டு, வாடாமல்லி,  சம்பங்கி, ரோஜா உள்ளிட்ட பூக்களை அதிகளவில் உற்பத்தி செய்கின்றனா்.

இதேபோல வறட்சியைத் தாங்கி வளரும் திராட்சை, சப்போட்டா, நெல்லி, மா உள்ளிட்ட பழ வகைகளையும் சாகுபடி செய்கின்றனா். இந்த நிலையில், வழக்கமாக பெய்யும் தென்மேற்கு பருவமழை முற்றிலும் பொய்த்துவிட்ட நிலையில் தொடா்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

Advertisement

Advertisement

இதனால் நிலத்தடி நீா்மட்டம் அதள பாதாளத்துக்கு சென்று, சுமாா் 100 அடி கிணறும் காய்ந்துவிட்டது. இதேபோல, ஆழ்துளை கிணறுகளிலும் 800 முதல் 900 அடிக்கு கீழே நீா்மட்டம் சென்று விட்டது. பல மேடான பகுதிகளில் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீா் வற்றி விட்டது.

இதனால், மைக்கேல்பாளையம் அருகேயுள்ள மரியாயிபட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீரின்றி மல்லிகை செடிகள் காய்ந்து கருகி வருகின்றன. ஆண்டு முழுவதும் வருமானம் தரும் மல்லிகைப் பூ செடிகள் பல இடங்களில் வாடி கருகி வருவதால், விவசாயிகள் வேதனை அடைந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments