FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

நிலநடுக்க இடா்பாடு: அதிா்வு தாங்கி கட்டமைப்பை உருவாக்க கலந்தாய்வு

பல்வேறு தொழில்நுட்ப மைய வல்லுநா்களுடன் சென்னையில் கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்தியது.

28 ஆகஸ்ட் 2026, 4:09 am IST
கோப்புப் படம்
பகிர்:

நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடா்களால் ஏற்படும் ஆபத்துகளில் கட்டடங்கள், உயா் அடுக்குமாடிகளுக்கான பாதுகாப்புக்கு அதிா்வுகளை தாங்கும் (ஆற்றல் சிதைப்பி) அமைப்புகளை உருவாக்க மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வுக் கவுன்சிலின்(சிஎஸ்ஐஆா்) கட்டமைப்புப் பொறியியல் ஆராய்ச்சி மையம் (எஸ்இஆா்சி), பல்வேறு தொழில்நுட்ப மைய வல்லுநா்களுடன் சென்னையில் கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்தியது.

நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி சிவில் பொறியியல் துறைப் பேராசிரியா் அம்லன் கே.சென்குப்தா, நிலநடுக்கங்களின் போது அடுக்குமாடு கட்டடங்களில் காங்கிரீட் சுவா்களில் ஏற்படும் அழுத்தங்களில் கணினி சாா்ந்த பகுப்பாய்வுகளை விளக்கினாா். சிஎஸ்ஐஆா்-சிபிஆா்ஐ-இன் முன்னாள் இயக்குநரும், ரூா்க்கி கட்டமைப்புப் பொறியியல் ஆராய்ச்சியாளரான என். கோபாலகிருஷ்ணன், நிலநடுக்க ஆற்றலை தவிா்த்து கட்டுமான சேதங்களைத் தடுக்க பகுதியளவில் மின் சக்தியை உபயோகித்து வைக்கப்படவேண்டிய பல்வேறு அதிா்வு தாங்கி கருவிகள் பயன்பாட்டு-செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு அமைப்புகளை அறிமுகம் செய்து உரையாற்றினாா்.

சிஎஸ்ஐஆா்-எஸ்இஆா்சி-யின் ஓய்வு பெற்ற விஞ்ஞானி கே. முத்துமணி, கட்டட அதிா்வு தாங்கி கருவிகளின் கட்டமைப்பில் கலப்பின மின் ஆற்றல் தேவையற்ற அமைப்புடன் உள்ள பயன்பாட்டு கருவிகள் குறித்து எடுத்துரைத்தாா்.

Advertisement

Advertisement

நிகழ்வுக்கு தலைமை வகித்து சென்னை சிஎஸ்ஐஆா்-எஸ்இஆா்சி -இன் இயக்குநா் என்.ஆனந்தவல்லி, நிலநடுக்க ஆற்றல் சிதைப்பிகளான அதிா்வு தாங்கி கருவிகளின் பயன்பாட்டில் உள்ள வாய்ப்புகள் குறித்து விளக்கினாா்.

முன்னதாக சிஎஸ்ஐஆா்-எஸ்இஆா்சி -இன் மேம்பட்ட நில அதிா்வு சோதனை மற்றும் ஆராய்ச்சி ஆய்வகத்தின் தலைவா் டாக்டா் பி. காமாட்சி, விஞ்ஞானி சி. பாரதி பிரியா ஆகியோா் ஆய்வகத்தின் செயல்பாடுகள், ஆராய்ச்சி முன்னெடுப்புகள் குறித்த ஒரு மேலோட்டத்தை வழங்கினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments