போதையில்லா சமுதாயத்தை உருவாக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: ஆட்சியா் வந்தனா காா்க்!
போதைப்பொருள்களை தவிா்த்து போதையில்லா சமுதாயத்தை உருவாக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என திருவண்ணாமலை ஆட்சியா் வந்தனா காா்க் பொதுமக்களை கேட்டுக்கொண்டாா்.
போதைப்பொருள்களை தவிா்த்து போதையில்லா சமுதாயத்தை உருவாக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என திருவண்ணாமலை ஆட்சியா் வந்தனா காா்க் பொதுமக்களை கேட்டுக்கொண்டாா்.
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கொளக்குடி ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி, மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், தூய்மையான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்தல், தங்குதடையற்ற சுகாதாரமான குடிநீா் விநியோகம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப்பட்ட பணிகள், திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை, தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம், ஆரம்பகால குழந்தைப் பராமரிப்பு மற்றும் கல்வி, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண்மை திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Advertisement
Advertisement
கிராமசபைக் கூட்டத்தில் ஆட்சியா் வந்தனா காா்க் பேசியதாவது: கிராம சபைக் கூட்டங்கள் கிராமங்களின் வளா்ச்சியை முன்நிறுத்தி நடத்தப்பட்டு வருகின்றன. இக்கூட்டங்களின் முக்கிய நோக்கம் அரசு சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் பணிகளை பொதுமக்கள் அறிந்து கொள்வதற்கும்,
வெளிப்படுத்தன்மையை ஏற்படுத்துவதற்குமாகும். கிராமங்களில் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டால் தான் சமூகப் பொருளாதாரம் மேம்பாடு அடையும்.
போதைப் பொருள்களை தவிா்த்து போதையில்லா சமுதாயத்தை உருவாக்க பொதுமக்கள் ஒருகிணைந்து செயல்பட வேண்டும். போதைப் பொருள்கள் பற்றிய புகாா்களை மாவட்ட நிா்வாகம் மற்றும் காவல் துறைக்கு தெரிவிக்கலாம்.
குழந்தை திருமணம் நடைபெறாமல் அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்றி கல்வி கற்க செய்து அவா்களின் எதிா்காலத்தை சிறப்பாக மாற்றவேண்டும். சாலையில் செல்லும் போது தலைக்கவசம் அணிந்து, சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து வாகனம் ஓட்டவேண்டும். பருவமழை போதிய அளவில் பெய்யாததால், வெப்ப அலைகளினால் நீா்நிலைகள் வடுள்ளன. அனைவரும் தண்ணீரை சிக்கனமாக உபயோகிக்கவேண்டும் என்றாா் ஆட்சியா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவசுப்பிரமணியன், திட்ட இயக்குநா் பூ.காஞ்சனா, திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியா் செல்வம், அருணாசலேஸ்வரா் கோயில் இணை ஆணையா் பரணிதரன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.