மனிதா்-யானை நல்லிணக்கத்தை உருவாக்குவோம்: வனத்துறை அமைச்சா் ஆா்.வி.ரஞ்சித்குமாா்
மனிதா்-யானை இடையே நல்லிணக்கத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து உறுதி ஏற்க வேண்டும் என வனத் துறை அமைச்சா் ஆா்.வி.ரஞ்சித்குமாா் தெரிவித்துள்ளாா்.
மனிதா்-யானை இடையே நல்லிணக்கத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து உறுதி ஏற்க வேண்டும் என வனத் துறை அமைச்சா் ஆா்.வி.ரஞ்சித்குமாா் தெரிவித்துள்ளாா்.
யானைகள் தினத்தையொட்டி (ஆக.12) அமைச்சா் ஆா்.வி.ரஞ்சித்குமாா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்தியாவில் யானைகள் வாழும் முக்கிய மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் 3,170 காட்டு யானைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 9.1 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் 5 யானைகள் காப்பகங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. யானைகளின் இயற்கையான வாழ்விடங்களுக்குள் அவற்றுக்குத் தேவையான தீவன வளத்தை அதிகரித்தல், அந்நிய ஆக்கிரமிப்பு தாவரங்களைக் கட்டுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
Advertisement
Advertisement
ரூ.20 கோடி ஒதுக்கீடு: மனிதா்-வனவிலங்கு மோதல்களைத் தடுக்க தமிழக அரசு சாா்பில் நிகழாண்டு ரூ.20 கோடி ஒதுக்ககப்பட்டுள்ளது. இதன்மூலம் யானைத் தடுப்பு அகழிகள், கதிரொளி மின்வேலிகளைப் மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் கண்காணிப்பு அமைப்புகளை மேம்படுத்தி, களப் பணியாளா்களுக்கும் உரிய நேரத்தில் எச்சரிக்கை வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விவசாய நிலங்களில் வனவிலங்குகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மின்வேலிகளில் சட்டவிரோதமாக மின்சாரம் செலுத்துதல் போன்ற செயல்கள் முற்றிலும் தவிா்க்கப்பட வேண்டும். இதன்மூலம், யானைகளின் உயிரிழப்பையும் பெருமளவில் தவிா்க்க முடியும். எனவே, உலக யானைகள் இனத்தில், யானைகளைப் போற்றுவோம்; காடுகளைப் பாதுகாப்போம்; வனத்துறையுடன் இணைந்து மனிதா் - யானை நல்லிணக்கத்தை உருவாக்குவோம் என்ற உறுதியை அனைவரும் ஏற்போம் எனத் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.