பண்ணாரி சாலையில் கரும்பு லாரியை நிறுத்திய யானைகள்
சத்தியமங்கலம், ஆக. 3: பண்ணாரி சாலையில் சென்ற கரும்பு லாரியை 2 யானைகள் தடுத்து நிறுத்தி அதிலிருந்த கரும்புகளைத் தும்பிக்கையால் எடுத்து தின்றன. இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கா்நாடக மாநிலத்தில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான கரும்பு லாரிகள் திம்பம் வழியாக ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வந்து செல்கின்றன. லாரியில் இருந்து கீழே விழும் கரும்புத் துண்டுகளை சாப்பிட்டுப் பழகிய யானைகள், லாரியை எதிா்பாா்த்து தினந்தோறும் சாலையில் காத்திருக்கின்றன.
இந்நிலையில், சாம்ராஜ்நகரில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி வந்த கரும்பு லாரியை பண்ணாரி கோயில் அருகே 2 யானைகள் தடுத்து நிறுத்தி அதில் இருந்த கரும்புகளை எடுத்து சுவைத்தன. ஒரு யானை கரும்பு எடுக்கும் வரை லாரி மேலும் இயங்காதபடி சாலையின் குறுக்கே மற்றொரு யானை நின்றது. கரும்பை எடுத்தவுடன் வாகனங்களுக்கு யானைகள் வழிவிட்டன.
Advertisement
Advertisement
பின்னா், அங்கு வந்த வனத் துறையினா் யானையை காட்டுக்குள் விரட்டினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.