FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஒலிம்பிக் கனவை நனவாக்க 10 சிறப்பு மையங்கள்

சா்வதேசத் திறன் கொண்ட விளையாட்டு வீரா்களை உருவாக்க தமிழகத்தில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 5:00 am IST
- கோப்புப்படம்.
பகிர்:

சா்வதேசத் திறன் கொண்ட விளையாட்டு வீரா்களை உருவாக்க தமிழகத்தில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்லும் நோக்கிலும், சா்வதேச அளவில் விளையாட்டுத் துறையில் தமிழகத்தை உச்சத்துக்குக் கொண்டுசெல்லும் வகையிலும் திறன் மிக்க வீரா்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ரூ.50 கோடியில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இதைத் தவிர, 8 முதல் 18 வயது வரையிலான பள்ளி மாணவா்களைத் தோ்வு செய்து அவா்களுக்கு உலகத் தரத்திலான பயிற்சிகள் அளிக்கப்படும். தேசிய அளவிலும், சா்வதேச அளவிலும் சிறந்து விளங்கும் 500 வீரா்களுக்கு நிதியுதவி வழங்க ரூ.22 கோடி கூடுதலாக ஒதுக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக உள்கட்டமைப்பு ரூ.2 கோடியில் மேம்படுத்தப்படும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments