FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

வேளாண்மைப் பொறியியல் பயிற்சி மையங்கள்! எங்கெங்கே?

வேளாண்மைப் பொறியியல் பயிற்சி மையங்கள் அமைக்கப்படவுள்ளது பற்றி...

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 11:05 am IST
வேளாண்மைப் பொறியியல் பயிற்சி மையங்கள் - TNDIPR
பகிர்:

தமிழ்நாட்டில் 5 இடங்களில் வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மற்றும் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2026 - 27ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட் பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் வினோத், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேரவையில் உரையாற்றி வருகிறார்.

இந்த பட்ஜெட்டில், திருக்கோவிலூர், முசிறி, காரைக்குடி, தாராபுரம், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மற்றும் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 4.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மேலும், வேளாண் இயந்திரங்களைப் பழுது நீக்கி பராமரிக்கும் 15 மையங்கள் அமைத்திட 50 சதவிகிதம் மானியம் வழங்குவதற்காக ரூ. 1.12 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், 100 விவசாயிகளுக்கு 50 சதவிகிதம் மானியத்தில் கதரடிக்கும் களங்கள் அமைக்க ரூ. 2.8 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடலோர மாவட்டங்களில் முன்னோடித் திட்டமாக நன்னீர் கிணறுகள் அமைத்து மிளகாய் மற்றும் கொத்தமல்லி சாகுபடி செய்வதற்காக ரூ. 49.4 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

summary

Agricultural Engineering Training Centres! Where are they located?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments