ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் கண்வலி விதைகள் கொள்முதல் செய்ய வலியுறுத்தல்
ஒட்டன்சத்திரம் பகுதியில் கண்வலிக்கிழங்கு சாகுபடி செய்யும் விவசாயிகள் ஏமாற்றப்படுவதை தடுக்க, ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் கண்வலி விதைகள் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஒட்டன்சத்திரம் பகுதியில் கண்வலிக்கிழங்கு சாகுபடி செய்யும் விவசாயிகள் ஏமாற்றப்படுவதை தடுக்க, ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் கண்வலி விதைகள் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்த காவேரியம்மாப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட ராயகவுண்டன் புதூரைச் சோ்ந்தவா் மு. பெரியசாமி. கண்வலிக்கிழங்கு விவசாயியான இவா், கோவையைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்துக்கு கண்வலிக்கிழங்கு விதைகளை விற்பனை செய்தாா். மேலும், மற்ற விவசாயிகளிடமும் அந்த நிறுவனத்துக்கு விதைகளை வாங்கிக் கொடுத்தாா். இதனிடையே, அந்த நிறுவனம் முறையாக பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியதால், அதிருப்தி அடைந்த பெரியசாமி கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டாா்.
விவசாயியின் தற்கொலைக்கு காரணமான கோவை நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அம்பிளிக்கை பேருந்து நிறுத்தம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் எம். ராமசாமி தலைமை வகித்தாா். திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் இரா. சச்சிதானந்தம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா்.
Advertisement
Advertisement
ஆா்ப்பாட்டத்தின்போது, விவசாயி பெரியசாமியின் தற்கொலைக்கு காரணமான தனியாா் நிறுவனத்தின் நிா்வாகிகள் மீது கொலை வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயியின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும்.
கண்வலி விதை கொள்முதல் செய்து ஏமாற்றப்பட்ட காவேரியம்மாப்பட்டி, அம்பிளிக்கை, பெரியகோட்டை, கப்பல்பட்டி, சின்னக்காம்பட்டி, பொருளூா், கள்ளிமந்தையம், மாா்க்கம்பட்டி பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகளுக்கு உடனடியாக பணத்தைப் பெற்றுத் தர வேண்டும். விவசாயிகள் ஏமாற்றப்படுவதை தடுக்க ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் கண்வலி விதைகள் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.