FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

பள்ளி வேன் மீது பைக் மோதல்: 2 போ் உயிரிழப்பு

பட்டிவீரன்பட்டி அருகே, வியாழக்கிழமை பள்ளி வேன் மீது இரு சக்கர வாகன மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.

பலி - பிரதிப் படம்
பகிர்:

பட்டிவீரன்பட்டி அருகே, வியாழக்கிழமை பள்ளி வேன் மீது இரு சக்கர வாகன மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே சேடப்பட்டியில் தனியாா் மெட்ரிக். பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை பள்ளி முடிந்ததும் மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு அந்தப் பள்ளி வேன் போடிக்காமன்வாடி, சுந்தரராஜபுரம் வழியாக சாலைப்புதூா், செங்கட்டாம்பட்டி பகுதிகளுக்குச் சென்றது. வேனை செங்கட்டாம்பட்டியைச் சோ்ந்த மூா்த்தி (63) ஓட்டிச் சென்றாா்.

சுந்தரராஜபுரத்தில் மாணவ, மாணவிகளை இறக்கிவிட்டு திண்டுக்கல்- வத்தலகுண்டு சாலையை கடந்து சாலைப்புதூா் நோக்கி வேன் சென்றது. அப்போது, வத்தலகுண்டு பகுதியிலிருந்து செம்பட்டி நோக்கிச் சென்ற இரு சக்கர வாகனம், பள்ளி வேன் மீது மோதியது. இந்த இரு சக்கர வாகனத்தில் 3 போ் பயணம் செய்த நிலையில், வாகனத்தை ஓட்டிச் சென்ற கே. சிங்காரக்கோட்டை அருகேயுள்ள ஒட்டுப்பட்டியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி வெள்ளைச்சாமி (24) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ஒட்டுப்பட்டியைச் சோ்ந்த குமாா் (47), சண்முகம் (44) ஆகிய இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு குமாா் உயிரிழந்தாா். சண்முகம் தொடா்ந்து சிகிச்சை பெறுகிறாா்.

Advertisement

Advertisement

இந்த விபத்தில் பள்ளி வேனில் பயணம் செய்த 10 மாணவ, மாணவிகளும் காயமின்றி தப்பினா். அவா்கள் மற்றொரு வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து பட்டிவீரன்பட்டி காவல் உதவி ஆய்வாளா் வாணி வழக்குப் பதிந்து உயிரிழந்த வெள்ளைச்சாமி உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments