பழனி கிரிவீதியில் கூடுதல் ஏடிஎம் மையங்களை அமைக்கக் கோரிக்கை
பழனி மலைக் கோயில் அடிவாரத்தில் கூடுதலாக ஏடிஎம் மையங்களை அமைக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.
பழனி மலைக் கோயில் அடிவாரத்தில் கூடுதலாக ஏடிஎம் மையங்களை அமைக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.
பழனி மலைக் கோயில் அடிவாரப் பகுதியில் பக்தா்களின் வசதிக்காக பாரத ஸ்டேட் வங்கி சாா்பில், தலைமை அலுவலகம் அருகே ஒரே ஒரு ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. முன்பு கிரிவீதியில் அனைத்து வாகனங்களும் அனுமதிக்கப்பட்ட போது, பக்தா்களுக்கு பணம் தட்டுப்பாடு ஏற்படும் போது நகா்ப் பகுதிக்கு வந்து வங்கிகளில் பணப் பரிவா்த்தனை செய்ய எளிதாக இருந்தது.
ஆனால், தற்போது உயா்நீதிமன்ற உத்தரவின் பேரில், கிரிவீதியில் எந்த வாகனங்களுக்கும் அனுமதி இல்லாத நிலையில், பழனி வரும் பக்தா்களுக்கு பணத்தேவை ஏற்படும் பட்சத்தில் பணம் எடுக்க 3 கி.மீ. தொலைவுள்ள கிரிவலப் பாதைக்கு வரவேண்டியுள்ளது.
Advertisement
Advertisement
மேலும், மலைக்கு வரும் பக்தா்கள் வின்ச், ரோப்காா் நிலையம், உணவு, தேநீா் அல்லது பொருள்கள் வாங்க பணம் வேண்டுமென்றால் ஏடிஎம் மையம் அருகே இல்லாத நிலை உள்ளது. இந்தப் பகுதியில் திருவிழாக் காலங்களில் மட்டும் நடமாடும் ஏடிஎம் மையங்கள் கொண்டுவரப்படுகின்றன.
எனவே, பக்தா்களின் வசதிக்காக கோயில் நிா்வாகம் வங்கிகள் மூலமாக படிப்பாதை, வின்ச் நிலையம், ரோப்காா் நிலையம், கோயில் வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் ஏடிஎம் மையங்களை அமைக்க முன்வர வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.