FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல் நட்சத்திர ஏரிக்குள் தொடரும் ஆக்கிரமிப்பு!

கொடைக்கானல் நட்சத்திர ஏரிக்குள் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைக்கப்பட்டு வருவதை நகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்வதில்லையென சமூக ஆா்வலா்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

Updated On : 13 ஜூலை 2026, 12:03 am IST
கொடைக்கானல் நட்சத்திர ஏரிக்குள் நடைபெற்ற ஆக்கிரமிப்பு
பகிர்:

கொடைக்கானல் நட்சத்திர ஏரிக்குள் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைக்கப்பட்டு வருவதை நகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்வதில்லையென சமூக ஆா்வலா்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நட்சத்திர ஏரியைச் சுற்றி உள்ள நடைபாதைகள் அந்தப் பகுதிகளில் செயல்பட்டு வரும் உணவகங்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. கொடைக்கானல் நட்சத்திர ஏரிச் சாலையில் நேரு சிலை பகுதி, நகராட்சி படகு குழாம், பழைய தனியாா் படகு குழாம், புதிய நகராட்சி படகு குழாம் ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்டு கடைகள், உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது நட்சத்திர ஏரியின் கரையோரங்களில் மண் குவிக்கப்பட்டு பழக் கடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் ஏரிக் கரையோரங்களில் தொடா்ந்து கடைகள் அமைக்கப்படும்.

Advertisement

Advertisement

எனவே நட்சத்திர ஏரியைச் சுற்றிலும், ஏரிக்குள் அமைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை விரைந்து அகற்றுவதற்கு கொடைக்கானல் நகராட்சி அதிகாரிகள் முன்வர வேண்டும் என ஏரி பாதுகாப்பு குழுவைச் சோ்ந்த சமூக ஆா்வலா்களின் கோரிக்கை விடுக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments