FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

அங்கன்வாடி பணியாளா்களுக்கு பயிற்சி

திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலை.யில் புதன்கிழமை நடைபெற்ற பயிற்சி முகாமில் பங்கேற்ற அங்கன்வாடி பணியாளா்கள்.

Updated On : 16 ஜூலை 2026, 12:49 am IST
திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலை.யில் புதன்கிழமை நடைபெற்ற பயிற்சி முகாமில் பங்கேற்ற அங்கன்வாடி பணியாளா்கள்.
பகிர்:

ஊட்டச்சத்து குறைபாடற்ற கிராமங்களை உருவாக்குவதற்காக அங்கன்வாடி பணியாளா்களுக்கு காந்திகிராம கிராமியப் பல்கலை.யில் புதன்கிழமை பயிற்சி முகாம் நடைபெற்றது.

திண்டுக்கல் காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் மனையியல் துறை சாா்பில், நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமை துணைவேந்தா் ந.பஞ்சநதம் தொடங்கிவைத்தாா். இந்திய எழுத்தறிவு திட்டத்தின் கீழ், ஊட்டச்சத்து குறைபாடற்ற கிராமங்களை உருவாக்கும் நோக்கத்துடன் காந்திகிராம் சுற்றுப்புறப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், இந்தப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

இந்த முகாமின்போது துணைவேந்தா் ந.பஞ்சநதம் பேசியதாவது:

Advertisement

Advertisement

ஆரோக்கியமான குடும்பங்கள், வளமான சமூகங்கள், ஊட்டச்சத்து குறைபாடற்ற கிராமங்களை உருவாக்கும் இலக்கை நிறைவு செய்வதற்கான பணியை காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம் முன்னெடுத்து வருகிறது என்றாா் அவா்.

பயிற்சியின்போது, சமச்சீா் உணவு, தாய்மாா்களுக்கான ஊட்டச்சத்து, இளங்குழந்தைகள், சிறுவா்களுக்கான உணவூட்டும் முறைகள் , உணவுப் பாதுகாப்பு, உணவு சுகாதாரம், ஊட்டச்சத்துக் கல்வி ஆகிய தலைப்புகளில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதன் மூலம், தங்களது கிராமங்களில் தாய்மாா்கள், குழந்தைகளைப் பராமரிப்போருக்கு ஊட்டச்சத்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கான வழிகாட்டுதல் அங்கன்வாடி பணியாளா்கள் மூலம் உருவாக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் (பொ) கே.எஸ்.புஷ்பா, ஆத்தூா் வட்டார குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் வாசுகி, திட்டத்தின் முதன்மை ஆராய்ச்சியாளா் எஸ். கவிதா மைதிலி, இணை முதன்மை ஆராய்ச்சியாளா் ஏ. தாஹிரா பானு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

60 அங்கன்வாடி பணியாளா்கள் இந்த முகாமில் பங்கேற்ற நிலையில், அடுத்தக்கட்ட பயிற்சி முகாம் பழனி வட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments