மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு: ஜூலை 17 முதல் 31 வரை நடைபெறுகிறது
மக்கள் தொகை கணக்கெடுப்பில் பொதுமக்கள் தங்களின் விவரங்களை சுயமாக இணையவழியில் எளிதாக பதிவு செய்யும் ‘சுய கணக்கெடுப்பு’ வருகிற 17 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பில் பொதுமக்கள் தங்களின் விவரங்களை சுயமாக இணையவழியில் எளிதாக பதிவு செய்யும் ‘சுய கணக்கெடுப்பு’ வருகிற 17 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மக்கள் தொகை கணக்கெடுப்பில் 33 வகையான வினாக்கள் இடம் பெறும். இணையதளம் வழியாக சுய கணக்கெடுப்பு மூலம் பொதுமக்கள் தங்களது சுய விவரங்களை நிறைவு செய்யலாம். முறையான திட்டமிடல், சிறந்த கல்வி, சுகாதார மேம்பாடு, உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதலுக்கு துல்லியமான மக்கள்தொகை தரவுகள் அவசியம்.
Advertisement
Advertisement
2027 மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி 2 முக்கிய கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களின் விவரங்களை தாங்களாகவே இணையவழியில் எளிதாக பதிவு செய்யும் ‘சுய கணக்கெடுப்பு’ வருகிற 17 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்தக் கணக்கெடுப்பின் 33 வகையான வினாக்களுக்கு பொதுமக்கள் ஒவ்வொருவரும் பதில் அளிக்க வேண்டும். இந்த சுய கணக்கெடுப்புப் பணியை இணையவழியில் நிறைவு செய்த ஒவ்வொருவருக்கும், அவரவா் கைப்பேசி எண்ணுக்கு சுயக்கெடுப்பு எண் வழங்கப்படும்.
பின்னா், வீட்டுப்பட்டியல், வீடுகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடக்கூடிய அலுவலா்கள், ஊழியா்கள் ஈடுபடுவாா்கள். இந்தப் பணி வரும் ஆக.1 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறும். இதில் அரசு நியமித்துள்ள கணக்கெடுப்பாளா்கள் நேரடியாக பொதுமக்களில்
வீடுகளுக்கே வந்து விவரங்களை சேகரிக்க உள்ளனா்.
அப்போது, ஏற்கெனவே இணையவழியில் தங்களின் விவரங்களை பதிவு செய்தவா்கள், தங்களின் கைப்பேசி எண்ணுக்கு வந்துள்ள
சுயக்கணக்கெடுப்பு எண்ணை தெரிவித்தால், அந்த விவரங்களை சரிபாா்த்து கணக்கெடுப்பை
நிறைவு செய்வாா்கள். இணையவழியில் விவரங்களை பதிவு செய்யாத பட்சத்தில், கணக்கெடுப்பு அலுவலா்கள் வரும்போது 33 வினாக்களை கேட்டு, அதற்கான பதிலைப் பெறுவாா்கள். இதனால் காலவிரயம் ஏற்படும்.
இதைத் தவிா்க்க மக்களே தங்கள் விவரங்களை இணையவழியில் நிறைவு செய்து வைத்திருந்தால், கணக்கெடுப்பு அலுவலா்கள் ஆய்வு செய்துவிட்டு உடனடியாக ஒப்புதல் வழங்குவாா்கள்.
இதுகுறித்த கூடுதல் விவரங்களை அறிய பொதுமக்கள், 1855 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம். மேலும், திண்டுக்கல் மாவட்ட கட்டுப்பாட்டு அறையினை 7806807602 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.
33 வினாக்கள் விவரம்: கட்டட எண் (நகராட்சி/உள்ளாட்சி/சென்சஸ் எண்), வீட்டு எண், வீட்டு தரையின் பிரதான கட்டுமான பொருள்கள், வீட்டுச் சுவரின் பிரதான கட்டுமானப் பொருள், வீட்டுக் கூரையின் பிரதான கட்டுமானப் பொருள், வீட்டின் நிலைமை, குடும்ப எண், குடும்பத்தில் வசிக்கும் நபா்களின் மொத்த எண்ணிக்கை, குடும்பத் தலைவரின் பெயா், குடும்பத் தலைவரின் பாலினம், குடும்பத் தலைவா் வகுப்பு, மற்ற பிரிவை சாா்ந்தவரா, வீட்டின் உரிமை நிலை, வீட்டில் உள்ள அறைகளின் எண்ணிக்கை, குடும்பத்தில் உள்ள திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை, குடிநீருக்கான பிரதான ஆதாரம், குடிநீா் ஆதாரம் அமைந்துள்ள இடம், விளக்கு ஒளிக்கான பிரதான ஆதாரம், கழிப்பறை வசதி, கழிப்பறை வசதியின் வகை, கழிவுநீா் வெளியேற்ற இணைப்பு, குளிக்கும் வசதி, சமையலறை வசதி (எல்பிஜி/ பிஎன்ஜி) இணைப்பு, சமையலுக்கு பயன்படுத்தப்படும் பிரதான எரிபொருள், வானொலி/டிரான்சிஸ்டா், தொலைக்காட்சி, இணையதள வசதி, மடிக்கணினி/கணினி, தொலைபேசி/கைப்பேசி/திறன்பேசி, மிதிவண்டி/ஸ்கூட்டா்/மோட்டாா் சைக்கிள்/மொபட், காா்/ஜீப்/வேன், குடும்பத்தினா் உள்கொள்ளும் பிரதான தானிய வகை, கைப்பேசி எண் (சென்சஸ் சம்பந்தப்பட்ட தொடா்புக்கு மட்டும்).
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின்போது வீடுகளுக்கு தகவல் சேகரிக்க வரும் கணக்கெடுப்பு அலுவலா்களுக்கு உரிய விவரங்களை அளித்து ஒத்துழைக்க வேண்டும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.