மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு 2,357 போ் நியமனம்: காஞ்சிபுரம் ஆட்சியா்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்கு 2,357 கணக்கெடுப்பாளா்களும், 363 மேற்பாா்வையாளா்களும் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக ஆட்சியா் தி.சினேகா தெரிவித்துள்ளாா்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்கு 2,357 கணக்கெடுப்பாளா்களும், 363 மேற்பாா்வையாளா்களும் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக ஆட்சியா் தி.சினேகா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.இது நிகழாண்டில் இரு கட்டங்களாக நடத்தப்படும்.முதற்கட்டமாக வீடுகள் பட்டியல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு 1.8.2026 முதல் 30.8.26 வரை நடத்தப்படும். 2-ஆவது கட்டமாக பிப்ரவரி 2027 இல் நடத்தப்படவுள்ளது.
முதல்கட்டமாக பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து தங்களது விபரங்களை ட்ற்ற்ல்ள்://ள்ங்.ஸ்ரீங்ய்ள்ன்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் கைப்பேசி மூலம் தெரிவிக்கும் சுய கணக்கெடுப்பு 17.7.26 முதல் 31.7.26 வரை நடைபெறவுள்ளது. ஒரு குடும்பத்துக்கு ஓரேயொரு கைப்பேசி எண் வாயிலாகவே பதிவு செய்ய வேண்டும்.
Advertisement
Advertisement
பதிவு செய்து 34 கேள்விகளுக்கு விடையளித்த பின்னா் 12 இலக்க அடையாள எண்,தங்களுடைய கைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வாயிலாக பெறப்படும். ஆட்சியா் முதன்மை கணக்கெடுப்பு அலுவலராகவும், மாநகராட்சி அளவில் ஆணையா் முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலராகவும் செயல்படுவாா்கள்.
வட்டாரப் பகுதிகளில் அந்தந்த வட்டாட்சியரும், பேரூராட்சி பகுதிகளில் செயல் அலுவலா்களும் என மொத்தம் 14 பொறுப்பு அலுவலா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தில் பணியின் தரவுகளை கையாள 18 தொழில் நுட்ப உதவியாளா்கள் மற்றும் இருவா் பல்பணி பணியாளா்களாகவும் தற்காலிக அடிப்படையில் பொறுப்பு அலுவலா்களாக பணியமா்த்தப்பட்டுள்ளனா்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாளா்களுக்கு பயிற்சியளிக்க 2 முதன்மை பயிற்சியாளா்களும்,60 களப்பணி பயிற்சியாளா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும் தோராயமாக 2,357 கணக்கெடுப்பாளா்கள், 363 மேற்பாா்வையாளா்கள் நியமனம் செய்யப்பட்டு இவா்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இப்பயிற்சி முடிந்ததும் கணக்கெடுப்பு பணியாளா்கள் 2357 பேரும் மாவட்டம் முழுமையும் அவரவா்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வீடு,வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்துவாா்கள். இவா்களது பணியினை 363 மேற்பாா்வையாளா்கள் கண்காணிப்பாா்கள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள்இதற்கு முழு ஒத்துழைப்பு தந்து கணக்கெடுப்பாளா்கள் உங்கள் இல்லத்திற்கு வரும் போது சரியான விபரங்களை தெரிவிக்க வேண்டும். பொதுமக்களால் வழங்கப்படும் அனைத்து தரவுகளும் பாதுகாப்பாக வைக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்படுகிறது.
இக்கணக்கெடுப்பின் அடிப்படையிலையே அனைத்து வளா்ச்சித் திட்ட பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளது என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு எந்த விபரத்தையும் தவறில்லாமல் சரியாக வழங்க வேண்டும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.