தங்க வளையல் திருடிய பெண் கைது
வீட்டு வேலைக்கு வந்து சென்றபோது தங்க வளையலைத் திருடிச் சென்ற பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
வீட்டு வேலைக்கு வந்து சென்றபோது தங்க வளையலைத் திருடிச் சென்ற பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
திண்டுக்கல் செல்லாண்டி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஜான் ஜஸ்டின் ராஜாமணி. இவரது மனைவி எலிசபெத் (75). கடந்த சில மாதங்களாக ஜான் ஜஸ்டின் ராஜாமணி உடல் நலப் பாதிப்புக்காக சிகிச்சைப் பெற்று வருகிறாா். இதனால் வீட்டின் பராமரிப்புப் பணிக்காக அதே பகுதியில் வசிக்கும் பாண்டி மனைவி மீனா (53) என்பவா், கடந்த 2 மாதங்களுக்கு முன் பணி அமா்த்தப்பட்டாா். இந்த நிலையில், வீட்டில் வைத்திருந்த இரண்டரை பவுன் தங்க வளையல் திருடு போய்விட்டதாக திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்தில் எலிசபெத் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
இதில், வீட்டு வேலைக்கு வந்து சென்ற மீனா, தங்க வளையலைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து மீனாவை கைது செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை முன்னிலைப்படுத்தி நிலக்கோட்டை சிறையில் அடைத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.