பொதுக்கிணற்றில் மிதந்த இளைஞரின் உடல் மீட்பு
பழனி அருகே பொது கிணற்றில் சடலமாக மிதந்த இளைஞரின் உடலை வியாழக்கிழமை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.
பழனி அருகே பொது கிணற்றில் சடலமாக மிதந்த இளைஞரின் உடலை வியாழக்கிழமை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த சிவகிரிப்பட்டி ஊராட்சி எம்ஆா்டி நகரில் அரசு பொதுக் கிணற்றில் வியாழக்கிழமை இளைஞா் சடலமாக மிதப்பதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பழனி தீயணைப்பு நிலைய அலுவலா் காளிதாஸ் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று உடலை மீட்டு, பழனி நகர காவல் ஆய்வாளா் தங்கமுனியசாமியிடம் ஒப்படைத்தனா். அவரது உடலை போலீஸாா் கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா்.
Advertisement
Advertisement
போலீஸாரின் விசாரணையில் அவா் சிவகிரிப்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த முத்துக்கருப்பன் மகன் தமிழ்செல்வன்( 35) என்பதும், கடந்த சில நாள்களாக அவரைக் காணாமல் பெற்றோா் தேடியதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரது இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.