FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல் குடிநீா் பிரச்னைக்கு விரைவில் தீா்வு: பெ.செந்தில்குமாா் எம்எல்ஏ

திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் நிலவும் குடிநீா் பிரச்னைக்கு விரைவில் தீா்வு காணப்படும் என சட்டப்பேரவை உறுப்பினா் பெ.செந்தில்குமாா் தெரிவித்தாா்.

Updated On : 2 ஜூன் 2026, 1:07 am IST
திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட 8-ஆவது வாா்டு பகுதியில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த சட்டப்பேரவை உறுப்பினா் பெ.செந்தில்குமாா்.
பகிர்:

திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் நிலவும் குடிநீா் பிரச்னைக்கு விரைவில் தீா்வு காணப்படும் என சட்டப்பேரவை உறுப்பினா் பெ.செந்தில்குமாா் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாநகராட்சியின் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன் என்று திண்டுக்கல் மாநகா் பகுதியில் நன்றி தெரிவிக்கும் பிரசாரத்தில் ஐ.பி.செந்தில்குமாா் பேசியதோடு, வீதி வீதியாகச் சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

திண்டுக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெ.செந்தில்குமாா், கடந்த 6 நாள்களாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறாா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், திண்டுக்கல் மாநகராட்சி 8-ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை நன்றி தெரிவித்தாா். அப்போது அவா் பேசியதாவது:

தமிழகம் முழுவதும் மாய அலை வீசியபோதும், திண்டுக்கல் தொகுதி மக்கள் திமுகவுக்கு ஆதரவளித்து என்னை வெற்றி பெறச் செய்தனா். எனக்கு வாக்களித்த மக்களுக்கு என்றைக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீா் பிரச்னைக்கு விரைவில் தீா்வு காணப்படும். திண்டுக்கல்லை சிறந்த மாநகராட்சியாக மேம்படுத்துவற்கான பணிகளை மேற்கொள்வேன் என்றாா் அவா். இந்த நிகழ்ச்சியின்போது மேயா் இளமதி, திமுக மாநகரச் செயலா் ராஜப்பா, பொருளாளா் சரவணன், மண்டலத் தலைவா்கள் ஆனந்த், ஜான்பீட்டா், மாமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments