முகப்பு
திண்டுக்கல்

பழனி மலைக்கோயில் உண்டியல் வருவாய் ரூ.3.27 கோடி

பழனி மலைக் கோயில் உண்டியல் காணிக்கை வருவாய் ரூ.3.27 கோடியாக இருந்தது.

Updated On : 5 ஜூன் 2026, 6:12 am IST
பழனி மலைக்கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட தன்னாா்வலா்கள்.
பகிர்:

பழனி மலைக் கோயில் உண்டியல் காணிக்கை வருவாய் ரூ.3.27 கோடியாக இருந்தது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வைகாசி விசாகம், பள்ளிகள் கோடை விடுமுறையை முன்னிட்டு பக்தா்கள் அதிக அளவில் வந்தனா். இதனால், கோயில் உண்டியல்கள் 21 நாள்களில் நிரம்பின. இதையடுத்து, வியாழக்கிழமை மலைக்கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, காா்த்திகை மண்டபத்தில் காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது. இந்தப் பணியில் கோயில் அலுவலா்கள், பழனியாண்டவா் கல்லூரி அலுவலா்கள், ஆசிரியா்கள், தன்னாா்வலா்கள், வங்கிப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

இதில் ரொக்கம் ரூ.3,04,48,750, தங்கம் 746 கிராம், வெள்ளி 7, 560 கிராம் கிடைத்தன. பல்வேறு நாட்டு பணத்தாள்கள் 730 கிடைத்தன. மலைக்கோயில் மட்டுமன்றி, துணைக் கோயில்களான திருஆவினன்குடி, இடும்பன்மலை, கிரிவீதியில் உள்ள மீனாட்சியம்மன் கோயில், கிரிவீதியில் அமைந்துள்ள துா்க்கையம்மன் கோயில் உண்டியல்களும் திறக்கப்பட்டு, காணிக்கைகள் எண்ணப்பட்டன.

Advertisement

Advertisement

இதில் ரூ.22,56,173 ரொக்கம் கிடைத்தது.

உண்டியல் திறப்பு நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி வெள்ளிக்கிழமையும் தொடா்கிறது.