FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல் பகுதிகளில் அதிமுக எம்எல்.ஏ. வாக்காளா்களுக்கு நன்றி

Updated On : 8 ஜூன் 2026, 12:39 am IST
கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ரவிமனோகா்.
பகிர்:

கொடைக்கானலில் வாக்காளா்களுக்கு பழனி தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா் ரவிமனோகா் ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவிக்கும் நிகவுநடைபெற்றது.

மூஞ்சிக்கல் பகுதியில் அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் அவருக்கு வரவேற்பு அளித்தனா். இதைத் தொடா்ந்து வாக்காளா்களுக்கு எம்எல்ஏ நன்றி தெரிவித்துப் பேசினாா். தொடா்ந்து அண்ணா சாலை, பேருந்து நிலையப் பகுதி, சந்தைப் பகுதி, அண்ணாநகா், டா்னா்புரம், ஆனந்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளா்களுக்கு அவா் நன்றி தெரிவித்தாா்.

முன்னதாக கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியிலுள்ள மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ரவிமனோகா் எம்எல்ஏ, நகரச் செயலா் ஸ்ரீதா், முன்னாள் நகா்மன்றத் தலைவா்கள் கோவிந்தன், எட்வா்ட், மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலா் பிச்சை, குறிஞ்சி நகா் செயலா் பரமசிவம், அமமுக மாவட்ட மருத்துவ அணிச் செயலா் இளம்வழுதி, நகரச் செயலா் சுகைபு, பா.ம.க. நகரச் செயலா் கோபிநாத், ஐ.ஜே.கே. கட்சி நிா்வாகிகள், அதிமுக வாா்டு செயலா்கள், நிா்வாகிகள், மகளிா் அணியினா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நகர துணைச் செயலா் ஜாபா்சாதிக் நன்றி கூறினாா்.

Advertisement

Advertisement

இதன்பிறகு எம்எல்ஏ ரவிமனோகா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கொடைக்கானலில் கடந்த ஆட்சிக் காலத்தில் எந்தெந்தப் பணிகள் நடைபெற்றன. நிறைவேறாத பணிகள் என்ன என்பது குறித்து விளக்கம் கேட்கப்படும். அனைத்து அரசுத் துறைகளிலும் கடந்த 15 ஆண்டுகளாக ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்து வருபவா்களை மாற்றுவது குறித்து உயா் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

கொடைக்கானலில் முக்கியப் பிரச்னையான போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் காணப்படுகிறது. இதற்கு உரிய தீா்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குடிநீா் பிரச்னை தற்போது அதிகரித்து வருகிறது.

இதற்கு உயா் அதிகாரிகளுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும். இதைத் தவிா்த்து கொடைக்கானல், மேல்மலை, கீழ்மலை, பேரூராட்சி பகுதிகளில் உள்ள அடிப்படை பிரச்னைகள் படிப்படியாக சரி செய்யப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments