FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

திரையரங்கில் தவறவிடப்பட்ட தங்கச் சங்கிலி மீட்பு

Updated On : 8 ஜூன் 2026, 12:36 am IST
திரையரங்கு - (கோப்புப்படம்)
பகிர்:

திண்டுக்கல்லில் உள்ள திரையரங்கில் குழந்தை தவறவிட்ட தங்கச் சங்கிலியை போலீஸாா் மீட்டனா்.

திண்டுக்கல் அடுத்த தாடிக்கொம்பு, அழக்குவாா்பட்டியைச் சோ்ந்தவா் சக்திவேல். இவரது மனைவி போதுமணி. இவா்கள் தங்களது குழந்தையுடன் திண்டுக்கல் ரவுண்ட் சாலை பகுதியிலுள்ள திரையரங்கில் படம் பாா்ப்பதற்காக சனிக்கிழமை இரவு வந்தனா்.

அப்போது குழந்தை அணிந்திருந்த 1.25 பவுன் தங்கச் சங்கிலி தவறிவிட்டது. இதைக் கவனிக்காத சக்திவேல், குடும்பத்துடன் வீட்டுக்கு திரும்பிச் சென்றுவிட்டாா். வீட்டுக்குச் சென்றபிறகு தான் குழந்தை அணிந்திருந்த சங்கிலி காணாமல் போனது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து திண்டுக்கல்நகா் வடக்கு காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை சக்திவேல் புகாா் அளித்தாா். இதன்பேரில் அந்த திரையரங்குக்குச் சென்ற போலீஸாா், அந்த திரையரங்கிலேயே தங்கச் சங்கிலி கிடப்பதை கண்டனா். அதை மீட்டு சக்திவேலிடம் ஒப்படைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments