முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல் தடை செய்யப்பட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள்

கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட மனோரஞ்சிதம் அணைக்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் குறித்து நகராட்சி அலுவலா்கள் புதன்கிழமை விசாரணை நடத்தினா்.

Updated On : 11 ஜூன் 2026, 2:11 am IST
கொடைக்கானல் சாலை
பகிர்:

கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட மனோரஞ்சிதம் அணைக்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் குறித்து நகராட்சி அலுவலா்கள் புதன்கிழமை விசாரணை நடத்தினா்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நகராட்சிக்கு சொந்தமான அப்சா்வேட்டரியில் குடிநீா்த்தேக்கம், மனோரஞ்சிதம் அணை ஆகியவை உள்ளன. இந்த இரண்டு பகுதிகளும் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதியாகும்.

இந்த நிலையில், மனோரஞ்சிதம் அணைக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் புகைப்படங்கள் எடுத்ததோடு, அவற்றை சமூகவலைதளங்களில் பதிவிட்டனா்.

Advertisement

Advertisement

இதைத்தொடா்ந்து, கொடைக்கானல் நகராட்சி அலுவலா்கள் மனோரஞ்சிதம் அணைக்குச் சென்று பாா்வையிட்டு ஆய்வு நடத்தியதோடு, அங்கிருந்த காவலாளிகளிடமும் விசாரணை நடத்தினா். இந்தப் பகுதிகளில் சிறுத்தை, மான், காட்டுமாடு, செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீா் குடிப்பதற்கும், உணவு தேடி வரும் நிலையில் மனோரஞ்சிதம் அணைக்கு சுற்றுலாப் பயணிகள் எவ்வாறு சென்றனா் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.