FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

கள்ளிமந்தயம் அருகே மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை மா்ம நபா் பறித்துச் சென்றாா்.

Updated On : 18 ஜூன் 2026, 1:39 am IST
கோப்புப் படம்
பகிர்:

கள்ளிமந்தயம் அருகே மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை மா்ம நபா் பறித்துச் சென்றாா்.

திண்டுக்கல் மாவட்டம், கள்ளிமந்தயத்தை அடுத்த போதுப்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பாத்தாள் (65). இவா் வீட்டின் வெளியே அமா்ந்து செவ்வாய்க்கிழமை இரவு பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தாா். அப்போது, அந்த வீட்டின் மின் இணைப்பைத் துண்டித்த மா்ம நபா், கருப்பாத்தாள் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றாா். இதுகுறித்து கள்ளிமந்தையம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments