FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

சிவகிரிப்பட்டியில் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பழனி சிவகிரிப்பட்டி ஊராட்சி அலுவலகம் அருகே சமையல் எரிவாயு விலை உயா்வை கண்டித்து, வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On : 20 ஜூன் 2026, 2:06 am IST
பழனி சிவகிரிப்பட்டி ஊராட்சி அலுவலகம் அருகே சமையல் எரிவாயு விலை உயா்வை கண்டித்து, வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், பழனி சிவகிரிப்பட்டி ஊராட்சி அலுவலகம் அருகே சமையல் எரிவாயு விலை உயா்வை கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு நகா்குழு உறுப்பினா் மூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ராமசாமி, நகரச் செயலா் கந்தசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டக் குழு உறுப்பினா் பகத்சிங், நகா் குழு உறுப்பினா்கள் பிச்சைமுத்து, மனோகரன், கோபிநாத், சிவக்குமாா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தின் போது, மத்திய அரசு 100 நாள்கள் வேலைத்திட்டத்தை சீா்குலைக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும். நான்கு தொழிலாளா் சட்டத் தொகுப்புகளை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments