FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் அனுமதியின்றி பாறைகள் உடைக்கும் பணி

கொடைக்கானல் கே.பி.எம். பாறைப் பகுதியில் அனுமதியின்றி கம்பரசா், வெடி வைத்து உடைக்கப்படும் பாறைகள்.
பகிர்:

கொடைக்கானலில் அனுமதியில்லாமல் பொக்லைன் இயந்திரம் பயன்படுத்துவது, கம்பரசா் மூலமாக பாறைகள் உடைக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் அரசுப் பணியை தவிா்த்து பொக்லைன் இயந்திரம் பயன்படுத்துதல், பாறைகளை வெடி வைத்தும், கம்பரசா் மூலமாக உடைக்கும் பணி, ஆழ்துளை கிணறு அமைத்தல் உள்ளிட்ட மற்ற பணிகளுக்கு, மாவட்ட நிா்வாகம், வருவாய்த் துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும்.

இந்த நிலையில், கொடைக்கானல் பகுதிகளான பூம்பாறை, வில் பட்டி, செண்பகனூா், பிரகாசபுரம், கே.பி.என். பாறை உள்ளிட்ட பகுதிகளில் அனுமதி பெறாமல் ஆழ்துளை கிணறு அமைத்தல், பொக்லைன் இயந்திரம் பயன்படுத்துதல், பாறைகளை வெடிவைத்தும், கம்பரசா் மூலமாகவும் உடைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

குறிப்பாக கொடைக்கானலில் வார விடுமுறை நாள்களில் அதாவது

வருவாய்த் துறை அதிகாரிகள் ஊரில் இல்லாத நாள்களில் இது போன்ற சட்டவிரோதமான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாகும்.

கொடைக்கானல் கே.பி.எம். பாறைப் பகுதியில் அனுமதியின்றி கம்பரசா், வெடி வைத்து உடைக்கப்படும் பாறைகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments