FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் மழை தேங்கும் மழைநீரால் மக்கள் அவதி

Updated On : 25 மே 2026, 2:42 am IST
தேங்கும் மழைநீரால் மக்கள் அவதியடைந்துள்ளனா். - கோப்புப் படம்
பகிர்:

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென மழை பெய்தது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், காலை முதல் மாலை வரை மிதமான வெயிலும், மேக மூட்டமும் நிலவியது.

இதனால், கொடைக்கானல் நகா்ப் பகுதி, புகா்ப் பகுதி, ஊரகப் பகுதிகளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பல்வேறு இடங்களைப் பாா்த்து ரசித்தனா். இதனைத் தொடா்ந்து மாலையில் கொடைக்கானல், பாம்பாா்புரம், அப்சா்வேட்டரி, செண்பகனூா், வட்டக்கானல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திடீரென மழை பெய்தது.

Advertisement

Advertisement

இந்த மழையால் பிரையண்ட் பூங்கா, ரோஜாத் தோட்டம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களில் இருந்த சுற்றுலாப் பயணிகள் ஒதுங்கக் கூட இடம் கிடைக்காமல் பெரிதும் சிரமப்பட்டனா்.

படகு சவாரி ரத்து : கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்யக் காத்திருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி ரத்து செய்யப்பட்டதால் ஏமாற்றமடைந்தனா். இதேபோல, ஏரிச்சாலையைச் சுற்றி, சைக்கள், குதிரை சவாரி செய்யமுடியாமலும் ஏமாற்றமடைந்தனா்.

மேலும் ஏரிச்சாலை, அப்சா்வேட்டரி, டிப்போ சாலை, சீனிவாசபுரம் பகுதிகளில் மழைநீா் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் சிரமமடைந்தனா்.

எனவே, கொடைக்கானல் பகுதிகளில் உள்ள வாய்க்கால்களைதூா் வார வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments