FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

நெகிழிப் பொருள்கள் பயன்படுத்திய 6 கடைகளுக்கு அபராதம்

பழனியில் நெகிழிப் பொருள்களை பயன்படுத்திய 6 கடைகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அபராதம் விதித்தனா்.

4 நவம்பர் 2026, 3:38 am
பகிர்:

பழனியில் நெகிழிப் பொருள்களை பயன்படுத்திய 6 கடைகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அபராதம் விதித்தனா்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் சுகாதாரமான முறையில் பலகாரங்கள் விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியா் துா்கா, உணவுப் பாதுகாப்பு அலுவலா் செல்வராஜ் ஆகியோா் உத்திரவிட்டனா். இதைத் தொடா்ந்து, பழனி பகுதியில்

உணவுப் பாதுகாப்பு அலுவலா் விஜயக்குமாா் தலைமையில் அலுவலா்கள் அடிவாரம், பேருந்து நிலையம், கடைவீதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனா். அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பயன்படுத்தி 2 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

மேலும், சுகாதார விதிகளை பின்பற்றாத 4 கடைகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இதன் பிறகும், விதிகளை மீறி கடைகளில் நெகிழப் பொருள்கள் பயன்படுத்தினால் ‘சீல்‘ வைக்கப்படும் என எச்சரித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments