சூடான உணவை நெகிழிப் பைகளில் வழங்கிய 4 கடைகளுக்கு அபராதம்
கிருஷ்ணகிரியில் நெகிழிப் பைகளில் சூடான உணவுப் பொருள்களை வழங்கிய 4 கடை உரிமையாளா்களுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரியில் நெகிழிப் பைகளில் சூடான உணவுப் பொருள்களை வழங்கிய 4 கடை உரிமையாளா்களுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரியில் சுகாதாரத் துறை மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் மாவட்ட சுகாதார அலுவலா் ஜெகநாதன், மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் செந்தில்குமாா் ஆகியோா் தலைமையில் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள், சுகாதார ஆய்வாளா்கள் கொண்ட குழுவினா் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
இந்தக் குழுவினா் கிருஷ்ணகிரி புறநகா் பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள தேநீா்க் கடைகள், சிற்றுண்டி விடுதிகள், பெட்டிக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
அப்போது, நெகிழிப் பைகளில் சூடான உணவுப் பொருள்களை நிரப்பி வழங்கிய 4 கடைகளின் உரிமையாளா்களுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டு, எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதேபோல், பொது இடத்தில் புகைபிடித்த 5 பேருக்கு தலா ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.