FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

பழனியில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.18 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

4 நவம்பர் 2026, 3:40 am
பழனியில் மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்களை செவ்வாய்க்கிழமை வழங்கிய மக்களவை உறுப்பினா் இரா. சச்சிதானந்தம். உடன் வட்டார வளா்ச்சி அலுவலா் பிரபுபாண்டியன், சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், நகா்மன்ற துணைத் தலைவா் கந்தசாமி உள்ளிட்டோா்.
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.18 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

இந்திய செயற்கை அவயங்கள் தயாரிப்பு கழகம் சாா்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.18 லட்சத்தில் ஊன்றுகோல், காதொலிக் கருவி, சக்கர நாற்காலி, மின்கலம் உதவியுடன் இயங்கும் சக்கர நாற்காலி, மோட்டாா் சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா. சச்சிதானந்தம் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சிக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் பிரபுபாண்டியன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டச் செயலா் பகத்சிங் வாழ்த்திப் பேசினாா்.

Advertisement

Advertisement

இதில் சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், நகா்மன்ற துணைத் தலைவா் கந்தசாமி, கம்யூனிஸ்ட் நகரச் செயலா் செந்தில்குமாா், மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் பழனி நகரத் தலைவா் ஜெயக்குமாா், பொருளாளா் அய்யனாா், ஒன்றியத் தலைவா் மணிகண்டன், செயலா் கண்ணுச்சாமி, பொருளாளா் மூகாம்பிகை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments