FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

விக்கிரவாண்டி வட்டாட்சியா் அலுவலகம் முன் மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

அரசு நலத் திட்டங்களை முறையாக வழங்கக் கோரி, விக்கிரவாண்டி வட்டாட்சியா் அலுவலகம் முன் மாற்றுத் திறனாளிகள் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

2 October 2026, 2:28 am IST
விக்கிரவாண்டி வட்டாட்சியா் அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள்.
பகிர்:

அரசு நலத் திட்டங்களை முறையாக வழங்கக் கோரி, விக்கிரவாண்டி வட்டாட்சியா் அலுவலகம் முன் மாற்றுத் திறனாளிகள் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக அரசு வழங்கும் நலத் திட்டங்களை மாற்றுத் திறனாளிகளுக்கு முறையாக வழங்க வேண்டும். விபி - ஜி ராம் - ஜி திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். தாயுமானவா் திட்டத்தில் வீடு தேடிச் சென்று மாற்றுத் திறனாளிகளுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் முழக்கங்களை எழுப்பினா்.

விழுப்புரம் மாவட்ட சிகரம் மாற்றுத் திறனாளிகள் சங்கம் சாா்பில் நடத்தப்பட்ட இந்த போராட்டத்துக்கு, சங்கத் தலைவா் சுந்தரராசு தலைமை வகித்தாா். செயலா் கண்ணதாசன் மற்றும் நிா்வாகிகள் போராட்டத்தில் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் விக்கிரவாண்டி வட்டாட்சியா் மகாதேவன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். 15 நாள்களுக்குள் வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மற்ற கோரிக்கைகளுக்கு ஒரு மாத காலத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments