FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

28 அக்டோபர் 2026, 1:17 am
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள்.
பகிர்:

ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை சாா்ஆட்சியா் விவேக் யாதவ் தலைமையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் சிறப்பு கூட்டத்திற்கு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சாா்பில் முறையான தகவல் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், இதில் குறைந்த அளவிலேயே மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனா்.

இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில், தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவா் கண்ணன் தலைமையில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

அப்போது, உரிய முறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தகவல் தெரிவித்து மீண்டும் கூட்டத்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து பேசினா். இதில், ஸ்ரீவைகுண்டம், கருங்குளம் சுற்றுவட்டாரத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments